திருப்பத்தூர்: கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா தடுப்பூசி

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Update: 2021-02-03 13:39 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 

திருப்பத்தூர் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி கொரோனா தடுப்பூசி போடும்பணி கடந்த மாதம் 16-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 1,150 சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக முன் களப்பணியாளர்கள், வருவாய்த்துறை, காவல் துறை, உள்ளாட்சி துறை மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களுக்கு தடுப்பூசி போட்டப்பட்டு வருகுிறது.

இந்த நிலையில் இன்று  திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கலெக்டர் சிவன்அருள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

அவர்களை தொடர்ந்து கலெக்டரின் நேர்முக உதவியாளர், துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். 

அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் திலீபன் கொரொனா தடுப்பு கண்காணிப்பாளர் டாக்டர் சுமதி, டாக்டர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்