சோளிங்கரில் போக்குவரத்து விதிகளை மீறிய 106 பேருக்கு அபராதம்
சோளிங்கரில் போக்குவரத்து விதிகளை மீறிய 106 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சோளிங்கர்
சோளிங்கரில் போக்குவரத்து விதிகளை மீறிய 106 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் சோளிங்கர் பஸ் நிலையம் அருகே, கருமாரியம்மன் கூட்ரோடு, பில்லாஞ்சி ேசாதனைச்சாவடி ஆகிய இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் அதிவிரைவாக வந்தவர்கள், தலைக்கவசம் அணியாமல் வந்தவர்கள,் செல்போன் பேசிக்கொண்டே வந்தவர்கள், லைசென்ஸ் இல்லாதவர்கள் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறிய 106 பேரை பிடித்து அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.