ஆம்பூர் நகராட்சியை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

ஆம்பூர் நகராட்சியை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2021-01-31 17:30 GMT
ஆம்பூர்

ஆம்பூரில் குண்டும் குழியுமான சாலைகள், குப்பை பிரச்சினை மற்றும் கால்வாய்கள் தூர்வாராமல் இருப்பது போன்ற அடிப்படை வசதிகள் செய்யாத ஆம்பூர் நகராட்சியை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

நகர செயலாளர் ஜமீல் அஹ்மத் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் சனாவுல்லா, மாவட்ட தலைவர் நசீர் அஹ்மத் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

த.மு.மு.க. மாவட்ட செயலாளர் சையத் ஜாவித், ம.ம.க. மாவட்ட செயலாளர் அப்துல் சுக்கூர், த.மு.மு.க. மாவட்ட துணை செயலாளர் தப்ரேஸ் அஹ்மத், நகர செயலாளர் நபீசுர்ரஹ்மான், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், நகர அணி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ம.ம.க. நகர துணை செயலாளர் பாருக் அஹ்மத் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்