படகு சவாரி தொடங்கப்படுமா?

ஒட்டாண்குளத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் படகு சவாரி தொடங்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2021-01-31 16:15 GMT
கூடலூர்:,

தேனி மாவட்டத்தில் வைகை அணை, கும்பக்கரை அருவி, மேகமலை, சுருளி அருவி, மஞ்சளாறு அணை, லோயர்கேம்பில் உள்ள பென்னிகுவிக் நினைவு மணிமண்டபம் உள்பட பல்வேறு சுற்றுலாத்தலங்கள் உள்ளன. 

மேலும் தேனி மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலும் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. 

கேரள மாநிலம் இருக்கி மாவட்டத்திற்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தேனி மாவட்டத்தின் கூடலூர் வழியாகத்தான் செல்கின்றனர். இந்த கூடலூரில் ஒட்டாண்குளம் உள்ளது. 

இங்குள்ள குளத்தில் எப்போதும் நீர்நிறைந்து காணப்படும். இந்த ஆண்டு பெய்த மழைக்கு குளம் நிரம்பி உள்ளது. இதில் பரிசலில் மீன் பிடிக்கும் பணி நடந்து வருகிறது. 

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த குளத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் படகு சவாரி தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

அவ்வாறு படகு சவாரி ெதாடங்கினால் கூடலூர் சுற்றுலா தலமாக மாறும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்