பள்ளப்பட்டி நங்காஞ்சி ஆற்றில் முட்புதருக்குள் தேங்கிய நிற்கும் கழிவுநீர்
நங்காஞ்சி ஆற்றில் முட்புதருக்குள் தேங்கிய நிற்கும் கழிவுநீர் குறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரவக்குறிச்சி:
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டியில் நங்காஞ்சி ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்ணீர் வந்து பள்ளப்பட்டி அருகே உள்ள நங்காஞ்சி ஆற்று தடுப்பணை நிரம்பி வழிந்தது. அணையில் இருந்து வழிந்தோடும் நீர் பள்ளப்பட்டி நங்காஞ்சி ஆற்றிலேயே அதிக அளவு காணப்படும் முட்புதருக்குள் சாக்கடை கழிவுநீருடன் தேங்கி நிற்கின்றது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து முட்புதர்களை முழுவதுமாக அகற்றி, சாக்கடை கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க கோண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.