தவுட்டுபாளையத்தில் ஆயத்த ஆடை தொழிற்கூட கட்டிடம் சீரமைக்கப்படுமா?
ஆயுத்த ஆடை தொழிற்கூட கட்டிடம் சீரமைக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்ப்பார்த்து உள்ளனர்.
நொய்யல்:
கரூர் மாவட்டம். என். ஊராட்சி தவுட்டு பாளையத்தில் இருந்து கட்டிபாளையம் செல்லும் சாலையில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முன்புறம் கடந்த சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளாட்சித் துறை மூலம் அப்பகுதியில் கட்டிடம் கட்டப்பட்டு அந்தக் கட்டிடத்தை ஆயத்த ஆடை தயார் செய்யும் தொழிற் கூடத்திற்கு விடப்பட்டு செயல்பட்டு வந்தது. தொழில் கூடத்தில் பணிகள் நடைபெற்று வந்தது.நீண்ட வருடங்கள் நடைபெற்று வந்த பணிகள் கட்டிடம் பழுதடைந்ததால் கட்டிடத்தின் மேற்கூரையிலிருந்து மழைநீர் ஒழுக ஆரம்பித்தது.கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் ஆங்காங்கே காங்கிரீட்கள் விழ ஆரம்பித்தது. மழை காலங்களில் தொடர்ந்து இதுபோன்ற மழை நீர் ஒழுக ஆரம்பித்ததாலும், கட்டிடத்தின் தன்மை குறைந்ததாலும் ஆயத்த ஆடைத் தொழில் கூடம் மூடப்பட்டது. அதனை ஒட்டி இருந்த அறையில் மகளிர் சுய உதவி குழு செயல்பட்டு வந்தது. கட்டிடம் மிகவும் பழுதடைந்திருந்ததால் அதன் காரணமாக மகளிர் சுய உதவிகுழுவின் அறையும் மூடப்பட்டது. எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என தவிட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.