கொரோனா தடுப்பூசி இயக்கம்
பெரம்பலூாில் கொரோனா தடுப்பூசி இயக்கம் நடைபெற்றது.;
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்திய மருத்துவர் சங்க பெரம்பலூர் கிளை சார்பில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி இயக்கம் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இயக்கத்திற்கு சங்க தலைவர் டாக்டர் செ.வல்லபன் தலைமை தாங்கினார். இதில் செயலாளர் டாக்டர் ராஜாமுகமது, பொருளாளர் டாக்டர் சுதாகர், முன்னாள் தலைவர் டாக்டர் செங்குட்டுவன், டாக்டர் கலா மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், அரசு டாக்டர்கள் உள்பட பலர் பெரம்பலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.