பெரம்பலூர் அருகே ஒரே நாளில் 10 ஆடுகள் திருட்டு; மர்மநபர்களுக்கு வலைவீச்சு

பெரம்பலூர் அருகே ஒரே நாளில் 10 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

Update: 2021-01-31 05:42 GMT
பெரம்பலூர்,

ஆடுகள் திருட்டு
பெரம்பலூர் அருகே உள்ள துறைமங்கலத்தை சேர்ந்தவர் பூவண்ணன்(வயது 42). இவருடைய ஆட்டுப்பட்டியில் கட்டப்பட்டிருந்த 5 ஆடுகளை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதேபோல் எளம்பலூர் கிராமத்தை சேர்ந்த தங்கவேலுவின் (52) பட்டியில் கட்டப்பட்டிருந்த 3 ஆடுகளையும், ராஜகோபாலின்(76) பட்டியில் கட்டப்பட்டிருந்த 2 ஆடுகளையும் மர்மநபர்கள் திருடி சென்றனர்.
இது தொடர்பாக பூவண்ணன், தங்கவேலு, ராஜகோபால் ஆகியோர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசார் விசாரணை
மேலும் ஆடு திருட்டில் ஈடுபட்டவர்கள் ஒரே கும்பலா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் அருகே ஒரே நாள் இரவில் 10 ஆடுகள் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்