மின்கம்பத்தில் மோதி கார் தீப்பிடித்தது
சாலையோர மின்கம்பத்தில் மோதி கார் தீப்பிடித்தது
மதுரை
சென்னையில் இருந்து ஒரு கார் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த காரில் 3 பேர் பயணம் செய்தனர். இந்தநிலையில் அந்த கார் நேற்று காலை 11 மணியளவில் ரிங்ரோடு சுற்றுச்சாலையில் வந்த போது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும், அருகில் உள்ள மின்கம்பத்தில் மோதியதில், கார் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே காரில் இருந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக தல்லாகுளம் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.