பொன்மலை கிருஷ்ணர் கோவிலில் சிறப்பு பூஜை
பொன்மலை கிருஷ்ணர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
பொன்மலைப்பட்டி,
உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் 650 கிருஷ்ண பக்தி இயக்கங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் கிருஷ்ணரை பற்றியும், பகவத் கீதையின் உபதேசமும் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த இயக்கங்களை உருவாக்கியவரான பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்களின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு பொன்மலை மலையடிவாரம் பகுதியில் அமைந்திருக்கும் கிருஷ்ணர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜையில் பஜனை, மகா ஆரத்தி, இளநீர் அபிஷேகம், நெய்அபிஷேகம், பால் அபிஷேகம், மலர் அபிஷேகம், பிரசாதம், பகவத் கீதை உபதேசம் நடைபெற்றது. இதில் திருச்சி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.