நாயை விஷம் வைத்துக் கொன்ற நபர்
குடியாத்தத்தில் நாயை விஷம் வைத்துக் கொன்ற நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
குடியாத்தம்
குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணியம்மாள் (வயது 67). இவர் கடந்த ஒன்றரை வருடங்களாக வீட்டில் நாய் வளர்த்து வந்துள்ளார்.
இவர்கள் வீட்டிற்கு அருகே உள்ள நபர் ஒருவர் அடிக்கடி மணியம்மாளிடம் அவரது வளர்ப்பு நாய் குறித்து தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி மணியம்மாளின் வளர்ப்பு நாய் திடீரென இறந்தது. அவர்கள் வீட்டு அருகே உள்ள அந்த நபர் நாய்க்கு உணவில் விஷம் வைத்து கொன்று விட்டதாக கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மணியம்மாள் அது குறித்து குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலு வெங்கட்ராமன் இந்த சம்பவம் தொடர்பாக