பெரம்பலூாில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடக்கிறது.

Update: 2021-01-31 02:27 GMT
பெரம்பலூர்,

இளம்பிள்ளைவாதம் நோயை ஒழிக்க பெரம்பலூர் மாவட்டத்தில் 5 வயதிற்கு உட்பட்ட 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 387 மையங்களில் நடத்தப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம்களில் மொத்தம் 1,548 பேர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இளம்பிள்ளைவாதம் நோயை ஒழிக்க, பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்