முயல் தீவில் இறந்து கிடந்த பெண்

முயல் தீவில் இறந்து கிடந்த பெண் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-01-31 01:32 GMT
பனைக்குளம், 
மண்டபம் அருகே நடுக்கடலில் உள்ள முயல் தீவு பகுதியில் அழுகிய நிலையில் உடல் ஒன்று கிடப்பதாக மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் மண்டபம் கடலோர காவல் நிலைய போலீசார் முயல் தீவு பகுதிக்கு படகு மூலம் சென்றனர். அங்கு சென்ற கடலோர போலீசார் அழுகிய நிலையில் கிடந்த அந்த உடலை கைப்பற்றி மண்டபம் கடற்கரைக்கு கொண்டு வந்து மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை செய்து பார்த்ததில் ஒரு பெண்ணின் உடல் என்பதும் அடையாளத்திற்காக எலும்புகள் சேகரித்து வைக்கப்பட்டு உள்ளதாகவும் கடலோர போலீசார் தெரிவித்துள்ளதுடன் முயல் தீவு பகுதியில் இறந்த நிலையில் கிடந்த அந்த பெண் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்