இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

குடியாத்தத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2021-01-31 01:31 GMT
குடியாத்தம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது தாக்குதல் சம்பவத்தை கண்டித்து புதிய பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய செயலாளர் துரைசெல்வம் தலைமை தாங்கினார். இ்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த ஆனந்தன், விநாயகம், பன்னீர்செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் எம்.பி.ராமச்சந்திரன், கே.சாமிநாதன், பி,குணசேகரன், சரவணன், காத்தவராயன், காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய தலைவர்கள் வீராங்கன், ஜோதிகணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் வாசுதேவன் உள்பட ஏராளமானோர்  கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு பதவி விலகக் கோரியும், குடியரசு தினத்தன்று டெல்லியில் ஊர்வலமாக சென்ற விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்