மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம்

மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார்;

Update: 2021-01-31 00:55 GMT
தெலுங்கானா ஆளுநராக இருப்பவர் தமிழிசை சவுந்தரராஜன். இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக விமானம் மூலம் மதுரை வந்தார். மாலை 4 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் முடித்து விட்டு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

மகாத்மா காந்தியடிகளின் நினைவுநாள். அவருக்கு மரியாதை செலுத்திவிட்டு மதுரை மீனாட்சி அம்மனை தரிசிப்பதற்காக வந்திருக்கிறேன். மதுரையில் சாமி தரிசனம் முடித்து விட்டு பழனிக்கு செல்கிறேன். இதற்காக தான் ஐதராபாத்திலிருந்து புறப்பட்டு வந்திருக்கிறேன். கொரோனா தடுப்பூசி குறித்து யாரும் பயப்பட தேவையில்லை. இங்கு நான் ஆளுநராக வந்துள்ளேன். அரசியல் பேச முடியாது. தைப்பூச திருவிழாவிற்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருந்தது. அதனை நிறைவேற்றித் தந்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எனது நன்றியை தெரிவித்தேன். மதுரை விமான நிலையத்தில் வந்தபோது முதல்- அமைச்சரை எதிர்பாராதவிதமாக சந்தித்தேன். அப்போது அவருக்கு நன்றி தெரிவித்தேன் என்றார். அவருடன் மதுைர மாவட்ட பா.ஜ.க. துைண தலைவா் ஹரிகரன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

மேலும் செய்திகள்