மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கபடி போட்டி
எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கபடி போட்டி
எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கபடி போட்டி வயலூர்ரோட்டில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 29-ந் தேதி முதல் தொடங்கிய இந்த போட்டி 3 நாட்கள் நடக்கிறது. மாநில எம்.ஜி.ஆர். இளைஞர்அணி இணைச்செயலாளர் பொன் செல்வராஜ் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். இதில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 22 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள். இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீரங்கம்-தாயனூர் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் ஸ்ரீரங்கம் அணி வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்படுகிறது.