திருச்சியில் டாக்டரின் ஆலோசனையின்றி கருக்கலைப்பு மாத்திரை தின்றதால் தாயும்-சிசுவும் பலி

திருச்சியில் டாக்டரின் ஆலோசனையின்றி கருக்கலைப்பு மாத்திரை தின்றதால் தாயும்-சிசுவும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2021-01-30 21:36 GMT
திருச்சி மிளகுபாறை காமராஜர் புரத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 43) கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுமதி (40). இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் மீண்டும் கர்ப்பம் தரித்த சுமதி, 8 மாதத்தில் குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்தார். இதற்காக அவர் டாக்டரின் ஆலோசனையின்றி கருக்கலைப்பு மாத்திரையை தின்று உள்ளார். இதனால் சுமதிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனே அவரது உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நேற்று முன்தினம் அவருக்கு 8 மாத ஆண் சிசு இறந்தே பிறந்தது. அடுத்த சில நிமிடங்களில் சுமதியும் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து செசன்ஸ் கோர்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்