அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டில் சிக்கியது

மதுக்கரை அருகே அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. அது வனப்பகுதியில் விடப்பட்டது.

Update: 2021-01-30 17:19 GMT
- கூண்டில் இருந்து விடுவிக்கப்பட்ட சிறுத்தை வனப்பகுதியை நோக்கி சீறிப்பாய்ந்து செல்லும் காட்சி.
போத்தனூர்

கோவையை அடுத்த மதுக்கரை அருகே வனப்பகுதியையொட்டி குவாரி ஆபீஸ், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது வனவிலங்குக ளின் நடமாட்டம் உள்ளது. மேலும் குடியிருப்பு மற்றும் விவசாய தோட் டங்களில் வனவிலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன.

இந்த நிலையில், கடந்த 21-ந் தேதி நள்ளிரவில் குவாரி ஆபீஸ் அருகே உள்ள காந்தி நகர் பகுதிக்கு சிறுத்தை ஒன்று வந்தது. அது, ஒரு வீட்டின் சுற்றுச்சுவரில் அமர்ந்து இருந்தது. பின்னர், சீனிவாசன் என்பவர் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை தாக்கி அட்டகாசம் செய்தது.

கூண்டு வைத்தனர்

இதையடுத்து மட்டபாறை தோட்டத்துக்குள் நுழைந்த சிறுத்தை, 4 ஆடுக ளை கடித்துக் குதறியது. இதை அறிந்த தோட்டத்தின் உரிமையாளர் வந்து சத்தம் போடவே சிறுத்தை வனப்பகுதிக்குள் தப்பி சென்றது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். அவர்கள், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர்.

அதன்பேரில் வனத்துறையினர் காந்திநகர் மற்றும் மட்டப்பாறை ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள், சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் மகிழ்ச்சி

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு காந்திநகர் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த கூண்டில் சிறுத்தை சி்க்கியது. நள்ளிரவு சுமார் 2 மணியளவில் பிடிபட்ட சிறுத்தையை கால்நடை மருத்துவர் சுகுமாரன் பரிசோதனை செய்தார்.
பின்னர் கூண்டில் சிக்கிய சிறுத்தை வனத்துறை வாகனத்தில் ஏற்றப் பட்டு இரவோடு இரவாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 

அங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் கூண்டு திறக்கப்பட்டது. அந்த கூண்டில் இருந்து சிறுத்தை சீறிப்பாய்ந்து வனப்பகுதியை நோக்கி ஓடியது.மதுக்கரை அருகே நடமாடிய சிறுத்தை பிடிக்கப்பட்டு சத்தியமங்கலம் வனப்பகுதியில் விடப்பட்டது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்