அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி திருவாரூர், திருத்துறைப்பூண்டியில் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

Update: 2021-01-30 17:00 GMT
திருவாரூர், 

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி திருவாரூர், திருத்துறைப்பூண்டியில் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
 
திருவாரூர்

14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி திருவாரூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு தொ.மு.ச. முன்னாள் துணைச்செயலாளர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. துணைத்தலைவர் மோகன், தொ.மு.ச. கிளை செயலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தொ.மு.ச. கிளை தலைவர் மணிகண்டன், சி.ஐ.டி.யூ. கிளை தலைவர் செங்குட்டுவன், கிளை செயலாளர் மதியழகன், தொ.மு.ச. கிளை பொருளாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
திருத்துறைப்பூண்டி

அதேபோல் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் பணிமனை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தொ.மு.ச. மத்திய சங்க பிரசார செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. கிளை செயலாளர் மதியழகன், தொ.மு.ச. கிளை செயலாளர் அருணகிரி, ஏ.ஐ.டி.யூ.சி. கிளை செயலாளர் வேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
போராட்டத்தில் தொ.மு.ச. கிளை தலைவர் அசோகன், கிளை பொருளாளர் வடிவேல், துணைத்தலைவர் கோவிந்தராஜன், ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாக குழு உறுப்பினர் தங்கபாண்டியன், செய்தி தொடர்பாளர் ரமேஷ், மத்திய சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் சவுந்தரபாண்டியன்,  சி.ஐ.டி.யூ. கிளை செயலாளர் செந்தில்குமார், துணைத்தலைவர் பக்கிரிசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்