அரசுபஸ்சில் மூதாட்டியிடம் ரூ.90 ஆயிரம் திருட்டு
அரசுபஸ்சில் மூதாட்டியிடம் ரூ.90 ஆயிரம் திருடிய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள கடுக்காய் வலசை பகுதியை சேர்ந்த ராக்கு என்பவரது மனைவி பாக்கியவதி (65). இவர் ராமநாதபுரத்தில் உள்ள வங்கி ஒன்றில் அடகு வைத்த நகையை திருப்புவதற்காக ரூ.90 ஆயிரம் பணத்தினை பையில் வைத்துக்கொண்டு உச்சிப்புளியில் இருந்து நேற்று காலை மதுரை செல்லும் அரசு பேருந்தில் ஏறி புதிய பஸ் நிலையத்தில் இறங்கினார். பின்னர் தான் வைத்திருந்த பையில் பணத்தை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பாக்கியவதி அளித்த புகாரின் அடிப்படையில் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.