விருதுநகர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நாளை நடக்கிறது
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் திங்கட்கிழமை தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முதல்-அமைச்சர் உத்தரவுப்படி நாளை முதல் காலை 10 மணி அளவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் சமூக இடைவெளி யுடன் முககவசம் அணிந்து மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர்கண்ணன்கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் கூட்டத்திற்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் எண், செல்போன் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு மனு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.