ஒரு கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

ராமநாதபுரம் அருகே ஒரு கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-01-30 15:56 GMT
ராமநாதபுரம், 

ராமநாதபுரம் அருகே உள்ள காரிக்கூட்டம் பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் ஜலாலுதீன் என்பவரின் மகன் முகம்மது உமருல் ஜமீன் (வயது 29). இவர் காரிக்கூட்டம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக ரோந்து சென்ற கேணிக்கரை போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். 

அவரிடம் நடத்திய சோதனையில் அவர் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்