மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை

மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2021-01-30 14:59 GMT
தற்கொலை செய்து கொண்ட முருகன்
கீழக்கரை, 

கீழக்கரை அருகே உள்ளே சின்ன ஏர்வாடியை சேர்ந்த முத்துவேல் மகன் முருகன் (வயது32) இவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார்.இவர் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறும் கேட்டதாகவும் கூறப் படுகிறது. அதற்கு பெற்றோர்கள் பெண் பார்த்து வருவ தாகவும் விரைவில் திருமணம் நடத்தி வைப்பதாக தெரிவித் தனர். இந்தநிலையில் முருகன் தொடர்ந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு மாடியில் உள்ள அறைக்கு படுக்கச்சென்று விட்டார். காலையில் நீண்ட நேரமாகியும் எழுந்து கீழே வரவில்லை என்று பெற்றோர்கள் மாடிக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அறைக்குள் முருகன் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த முத்துவேல் ஏர்வாடி காவல் நிலையத் திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து ஏர்வாடி போலீஸ் இன்ஸ் பெக்டர் சாமிநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்