வாணியம்பாடி, ரெயிலில் அடிபட்டு கூலி தொழிலாளி சாவு

வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் ரெயிலில் அடிபட்டு கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.;

Update: 2021-01-30 13:06 GMT
ஜோலார்பேட்டை,

வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் ரெயிலில் அடிபட்டு கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பட்டு சரனாங்குப்பம் முதலை மடுவு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 50).  இவர் கேரள மாநிலத்தில் கூலி வேலை செய்து வருகிறார்.  இவருக்கு பொண்ணு என்ற மனைவியும், பிள்ளைகளும் உள்ளனர். 

 விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு திரும்பினார். கேரளாவில் இருந்து ரெயில் மூலம் வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் நேற்று  இரவு அவர் இறங்கினார்.

பின்னர் 2-வது பிளாட்பாரத்தில் இறங்கி கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த  ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே மணி பரிதாபமாக இறந்தார். 

தகவலறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் வழக்குப்பதிவு செய்து மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்