கோவில்பட்டியில் தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதம்

கோவில்பட்டியில் தொழிற்சங்கத்தினர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-01-30 12:20 GMT
கோவில்பட்டி:

கோவில்பட்டியில் தொழிற்சங்கத்தினர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரத போராட்டம்

போக்குவரத்து ஊழியர்களின் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணபலன், நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தொழிற்சங்கங்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

கலந்து கொண்டவர்கள்

போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யு.சி. கிளை தலைவர் சிவமுருகன் தலைமை தாங்கினார். தொ.மு.ச. கிளை செயலாளர் மாரிமுத்து, கிளை தலைவர் கணபதி, சி.ஐ.டி.யு. மத்திய சங்க துணை பொதுச்செயலாளர் சிவகுமார், கிளை செயலாளர் மோகன், தலைவர் கருப்பசாமி, பார்வர்டு பிளாக் மத்திய சங்க பொறுப்பாளர் பெருமாள், ஓய்வூதியர் சங்கத்தை சேர்ந்த கருப்பசாமி, காசி, மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் காசிவிஸ்வநாதன், சி.ஐ.டி.யு. மத்திய சங்க தலைவர் காசிராஜன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

மேலும் செய்திகள்