ஜெயங்கொண்டத்தில் வீட்டிற்குள் புகுந்த பாம்பு

ஜெயங்கொண்டத்தில் வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது

Update: 2021-01-30 07:05 GMT
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாராம். இவருடைய வீட்டு குளியல் அறையில் நேற்று மாலை சுமார் 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது. இது குறித்து ராஜாராம் ஜெயங்கொண்டம் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து, பாம்பை பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். வீட்டிற்குள் பாம்பு புகுந்ததை அறிந்து, அப்பகுதி மக்கள் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலின் உள்ளே செங்கற்கள், ஜல்லிகள் கொட்டப்பட்டு சுகாதாரமற்ற நிலையில் கிடப்பதாலும், உய்யகொண்டான் ஏரியை சுற்றிலும் முட்செடிகள், புதர்கள் மண்டி கிடப்பதாலும் அப்பகுதியில் இருந்து விஷ ஜந்துகள் வெளியேறி வீடுகளுக்குள் புகுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே உய்யகொண்டான் ஏரியை தூர்வாரி தூய்மைப்படுத்த வேண்டும், கோவில் பகுதிகளை தூய்மைப்படுத்த வேண்டும், கோவில் முன்பு சிறுவர்கள் விளையாடுவதற்கு ஏற்றவகையில் பூங்கா அமைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்