ஏரியூர்:பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை
வீடியோ கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
ஏரியூர்:
வீடியோ கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்ெகாலை செய்து கொண்டார்.
பிளஸ்-2 மாணவி
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள அஜ்ஜனஅள்ளியை சேர்ந்தவர் பழனிசாமி. விவசாயி. இவருடைய மகள் விக்னேஸ்வரி (வயது 17). இவர் ஏரியூர் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சம்பவத்தன்று மாணவி வீட்டில் வேலை செய்யாமலும், படிக்காமலும் வீடியோ கேம் விளையாடி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.இதை பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவி விஷம் குடித்து விட்டு வீட்டில், மயங்கி கிடந்தார். இதையறிந்த உறவினர்கள் மாணவியை மீட்டு, பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் மாணவி சேர்க்கப்பட்டார்.
போலீசார் விசாரணை
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாணவி விக்னேஷ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி்ன்றனர். பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.