லாலாபேட்டை அருகே வேன் மீது லாரி மோதல்; 12 பேர் படுகாயம்

லாலாபேட்டை அருகே வேன் மீது லாரி மோதியதில் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-01-30 06:28 GMT
விபத்தில் சிக்கிய வேனை படத்தில் காணலாம்
லாலாபேட்டை:

 அரவக்குறிச்சியில் இருந்து மேல்மருவத்தூர் கோவிலுக்கு பக்தர்கள் 20 பேர் ஒரு வேனில் சென்றனர். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அரவக்குறிச்சியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 34) என்பவர் வேனை ஓட்டினார். நேற்று காலை திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மாயனூர் போலீஸ் சரகம் திருக்காம்புலியூர் அருகே வேன் வந்து கொண்டிருந்தபோது எதிரே கரூரில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி நிலைதடுமாறி வேன் மீது மோதியதாக கூறப்படுகிறது. 

இதில், வேன் சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேன் டிரைவர் செந்தில்குமார் (34), பக்தர்கள் விஜயன் (40), நாகேந்திரன் (43), பழனியம்மாள் (55), நாகம்மாள் (52) உள்பட 12 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவர் ராஜ்குமார் மீது மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்