உடையார்பாளையம் அருகே விவசாயியை தாக்கிய 3 பேர் கைது

உடையார்பாளையம் அருகே விவசாயியை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனா்.;

Update: 2021-01-30 01:48 GMT
உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் கருணாமூர்த்தி(வயது 41). விவசாயி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் பிரபாகரன்(21) என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பிரபாகரன், அவரது உறவினர்கள் இளங்கோவன் (21), தனவேல் (51) ஆகியோர் சேர்ந்து கருணாமூர்த்தியை தகாத வார்த்தையால் திட்டி தாக்கினர். 

இதில் படுகாயமடைந்த கருணாமூர்த்தி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் கருணாமூர்த்தி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து 3 பேரையும் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்