மதுரை கோவிலில் பணம், பொருட்கள் திருட்டு
கோவிலில் பணம், பொருட்கள் திருட்டு நடந்தது;
மதுரை சிந்தாமணி கண்மாய்கரை பகுதியில் மாடக்கருப்பன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று பூட்டை உடைத்து கோவிலுக்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த ரூ.25 ஆயிரம் ரொக்கம், பித்தளை பானை, குத்துவிளக்கு, வெள்ளிபொருட்கள் உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து கோவில் நிர்வாகி பாலமுருகன் அளித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.