ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆளும் பல்லக்குடன் தைத்தேர் திருவிழா நிறைவு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆளும் பல்லக்குடன் தைத்தேர் திருவிழா நிறைவு பெற்றது.

Update: 2021-01-29 23:09 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. இதையொட்டி நம்பெருமாள் தினமும் காலை, மாலை இரு வேளையும் பல்வேறு வாகனங்களில் உத்திரவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 27-ந் தேதி நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான நேற்று மாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ரெங்கவிலாச மண்டபம் வந்தடைந்தார். பின்னர், இரவு 8 மணிக்கு நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் புறப்பட்டு 4 உத்திர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இந்த நிகழ்ச்சியுடன் தைத்தேர் திருவிழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) அசோக்குமார், உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்