வராகி அம்மனுக்கு காவிரி ஆற்றில் சிறப்பு அபிஷேகம்

கொரோனா வைரசில் இருந்து விடுபட வேண்டி வராகி அம்மனுக்கு திருச்சி காவிரி ஆற்றில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.;

Update:2021-01-30 03:44 IST
உலக நன்மை வேண்டியும், கொரோனா வைரசிலிருந்து நாடு விடுபட வேண்டியும் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை அருகே காவிரி ஆற்றில் வராகி அம்மனுக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. சென்னை, அம்பத்தூர் புவனேஸ்வரி பீடத்தை சேர்ந்த பரத்வாஜ் சுவாமிகள் கலந்துகொண்டு பால், பழம், பன்னீர், இளநீர், நெய், பலகாரங்கள் உள்பட 64 வகையான அபிஷேகங்களை அம்மனுக்கு நடத்தினார். அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் திரைப்பட இயக்குனர் வசந்த் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்