திருப்பைஞ்சீலியில் தங்க குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளிய நீலிவனநாதர்
திருப்பைஞ்சீலியில் தங்க குதிரை வாகனத்தில் நீலிவனநாதர் வையாளி கண்டருளினார்.
திருப்பைஞ்சீலியில் உள்ள பிரசித்தி பெற்ற நீலிவனநாதர் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவிற்கு சுவாமி, அம்பாள் துடையூரில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு சென்று தீர்த்தவாரி கண்டு அருள்வது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் அம்பாள் பல்லக்கிலும், நீலிவனநாதர் குதிரை வாகனத்திலும் கோவிலிலிருந்து துடையூர் கொள்ளிடம் ஆற்றுக்கு சென்று தீர்த்தவாரி கண்டு அருளினார். அதைத்தொடர்ந்து நேற்று அங்கிருந்து சுனைபுகநல்லூர் வழியாக திருப்பைஞ்சீலி வந்தடைந்த சுவாமி, அம்பாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து தங்க குதிரை வாகனத்தில் நீலிவனநாதர் வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.