தர்மபுரியில்: வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
தர்மபுரி வக்கீல் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது
தர்மபுரி:
தர்மபுரி வக்கீல் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் மற்றும் பிற கோர்ட்டுகளில் உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தை தூய்மையாக பராமரிக்க தேவையான அளவில் துப்புரவு பணியாளர்களை பணியமர்த்த வேண்டும்.
தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் மோட்டார் வாகன விபத்துகள் குறித்து விசாரிக்கும் கோர்ட்டுகள் செயல்படுவதால் மாவட்டத்தின் பிற பகுதிகளில் நடக்கும் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை இந்த கோர்ட்டுகளுக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கோர்ட்டு புறக்கணிப்பு நடைபெற்றது. இதன் காரணமாக ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள கோர்ட்டுகளில் வழக்கமான பணிகள் நேற்று பாதிக்கப்பட்டன.