கணவருக்கு வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு: புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கணவருக்கு வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு: புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-01-29 17:25 GMT
ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள சின்னபேட்டகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மனைவி காவியா (20). இவர்களுக்கு திருமணமாகி 7 மாதங்கள் ஆகிறது.

 இந்த நிலையில், சிவக்குமாருக்கும், அதேபகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதை புதுப்பெண் காவியா, தனது கணவரிடம் கேட்டுள்ளார். 

இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த காவியா, நேற்று  கணவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் திருமணமான 7 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஓசூர் உதவி கலெக்டர் குணசேகரன் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்