விடுமுறையில் வந்த ராணுவ அதிகாரி திடீர் மரணம்
பேரணாம்பட்டு அருகே விடுமுறையில் ஊருக்கு வந்த ராணுவ அதிகாரி திடீர் என உயிரிழந்தார்.
பேரணாம்பட்டு
பேரணாம்பட்டு அருகே உள்ள கிருஷ்ணம்பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது 49), இவர் இந்திய ராணுவ பிரிவில் அதிகாரியாக கடந்த 29 ஆண்டுகளாக பணி புரிந்து வந்தார்.
அரியானா மாநிலத்திலுள்ள ராணுவ முகாமில் பணிபுரிந்த இவர் விடுமுறையில் கடந்த 10-ந் தேதி குடும்பத்தினரை பார்ப்பதற்காக சொந்த கிராமத்திற்கு வந்தார்.
இந்த நிலையில் நேற்று முனுசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக குடியாத்தத்திலுள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மேல்பட்டி போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி நிலாவேணி கொடுத்த புகாரின் சப்-இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.