காட்பாடி: எருது விடும் திருவிழா

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த வண்டறந்தாங்கல் கிராமத்தில் எருது விடும் திருவிழா நடைபெற்றது.

Update: 2021-01-29 14:36 GMT
வேலூர்

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த வண்டறந்தாங்கல் கிராமத்தில் எருது விடும் திருவிழா  நடைபெற்றது. 

விழாவை வேலூர் மாவட்ட தனித்துணை கலெக்டர் முருகன் (முத்திரைத்தாள் கட்டணம்) தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். காட்பாடி தாசில்தார் பாலமுருகன் முன்னிலை வகித்தார்.

விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் இளைஞர்கள் கூட்டத்தின் நடுவே சீறிப்பாய்ந்து ஓடியது. அப்போது இளைஞர்கள் மாட்டினை கைகளால் தட்டி உற்சாகப்படுத்தினர். 

சீறிப்பாய்ந்த காளைகள் இளைஞர்களின் கூட்டத்தின் நடுவே ஓடியதால் 21 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

விழாவில் 117 மாடுகள் ஓட விடப்பட்டன. இலக்கை குறைந்த நேரத்தில் அடைந்த காளைகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதன்படி முதல் பரிசை தட்டிச் சென்ற காளையின் உரிமையாளருக்கு ரூ.70 ஆயிரம் வழங்கப்பட்டது. 

இந்த விழாவினை காண மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதியில் இருந்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கிராமத்தில் கூடினர். அவர்கள் வீடுகள் மற்றும் மரங்களில் ஏறி அமர்ந்து விழாவை பார்த்து ரசித்தனர்.

மேலும் செய்திகள்