மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது

வில்லியனூர் பைபாஸ் சாலையில் மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-01-29 14:31 GMT
வில்லியனூர்,

வில்லியனூர் பைபாஸ் சாலையில் வந்த மோட்டார் சைக்கிளை ரோந்து போலீசார் மறித்து சோதனை செய்தனர். அப்போது அதை ஓட்டி வந்தவர் விழுப்புரம் பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 27) என்பதும், கூடுதல் விலைக்கு விற்பதற்காக மதுபாட்டில்களை கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 17 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து ஆனந்தை கைது செய்தனர். மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்