செவிலியர் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்

ஆரணி அரசு மருத்துவமனை முன்பு செவிலியர் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-01-29 11:40 GMT
ஆரணி

ஆரணி அரசு மருத்துவமனை முன்பாக தமிழ்நாடு செவிலியர் சங்கத்தினர் 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கே.ஜெகன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் என்.செல்லமாணிக்கம், செயற்குழு உறுப்பினர் ஸ்டீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செவிலியர் டார்த்தி வரவேற்றார்.

 செவிலியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் படிகள் ஆகியவற்றை மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசு வழங்க வேண்டும், பெரும் தோற்று காலத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய ஊழியர்களுக்கு அரசு அறிவித்த ஒரு மாத ஊக்கத் தொகையும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட செவிலியர்களுக்கு நிவாரணமும் வழங்க வேண்டும், உயிர்நீத்த செவிலியர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்கிட வேண்டும், கடந்த 6 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், இனி வரும் காலங்களில் தொகுப்பூதிய முறையை அறவே ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர். 

மேலும் செய்திகள்