கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த தலைமை ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த தலைமை ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர் உயிரிழப்பு.

Update: 2021-01-29 02:21 GMT
சென்னை, 

சென்னை மாடம்பாக்கம் பேபி விலாஸ் பதுவஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 48). இவர் சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் தலைமை ரெயில்வே பாதுகாப்புப்படை வீரராக பணி புரிந்து வந்தார். கடந்த மாதம் அவருக்கு திண்டிவனம் ரெயில் நிலையத்தில் பணி மாற்றம் செய்யப்பட்டது.

பணி மாற்றம் தொடர்பான வேலைகளை கவனித்து வந்த அவருக்கு, கடந்த மாதம் 23-ந்தேதி திடீரென சளி, காய்ச்சல் அறிகுறி இருந்தது. இதையடுத்து அவர், அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், 25-ந்தேதி அவர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை கொரோனா வார்டில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி நேற்று உயிரிழந்தார்.


மேலும் செய்திகள்