பெரம்பலூாில் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

பெரம்பலூாில் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2021-01-29 01:20 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவின்பேரில், பெரம்பலூர் சரகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்பை வலியுறுத்தியும் பாலக்கரை ரவுண்டானா அருகே நேற்று மதியம் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தொடங்கி வைத்து, அணிவகுப்பில் கலந்து கொண்டார். ஊர்வலம் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே முடிவடைந்தது. அப்போது, பெரம்பலூர் சரகத்தில் எந்தவித சட்டவிரோத செயலுக்கும், ரவுடியிசத்திற்கும், கஞ்சா போன்ற போதைப்பொருள் விற்பனைக்கும் இடம் கிடையாது. மேலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் மூலம் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்று போலீசார் எச்சரித்தனர். கொடி அணிவகுப்பு ஊர்வலத்தில் பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர்கள் பால்ராஜ், கோபிநாத், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராம்குமார், செந்தமிழ்ச்செல்வி, அண்ணாதுரை, பாலசுப்பிரமணியம், சக்திவேல் மற்றும் போலீசார், அதிவிரைவு படை போலீசார் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்