பெரம்பலூாில் போராட்டக்காரர்களை தடுப்பது குறித்த போலீசாா் ஒத்திகை

போராட்டக்காரர்களை தடுப்பது குறித்த போலீசாாின் ஒத்திகை பெரம்பலூாில் நடந்தது.

Update: 2021-01-28 21:41 GMT
தமிழகத்தில் வன்னிய சமூகத்தினருக்கு கல்வி-வேலை வாய்ப்பில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பா.ம.க.வினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையாக இன்று (வெள்ளிக்கிழமை) தமிழகம் முழுவதும் பா.ம.க.வினர் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டரை, பா.ம.க.வினர் சந்தித்து மனு அளிக்கும் போராட்டத்தில், எந்தவித அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க, போலீசாரின் ஒத்திகை நிகழ்ச்சி பாலக்கரை ரவுண்டானாவில் நேற்று மதியம் நடந்தது. மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில், பெரம்பலூர் சரக  துணை சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர்கள் பால்ராஜ், கோபிநாத் மற்றும் போலீசார், அதிவிரைவு படை போலீசார் போராட்டக்காரர்களை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து தத்ரூபமாக நடித்து காட்டி, ஒத்திகையில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்