தைப்பூசத்தையொட்டி உழவர்சந்தைகளில் ரூ.77 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை
தைப்பூசத்தையொட்டி உழவர்சந்தைகளில் ரூ.77 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன.
சேலம்,
தைப்பூசத்தையொட்டி உழவர்சந்தைகளில் ரூ.77 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் 11 உழவர் சந்தைகள் உள்ளன. இங்கு அந்தந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று தைப்பூசத்தையொட்டி அதிக அளவு காய்கறிகள் விற்பனை ஆகி உள்ளது.
அதன்படி மேட்டூர் உழவர் சந்தையில் நேற்று ஒரே நாளில் ரூ.4 லட்சத்து 81 ஆயிரத்து 50-க்கு காய்கறிகள் விற்பனை ஆகின.
அதே போன்று எடப்பாடியில் ரூ.4 லட்சத்து 19 ஆயிரத்து 192-க்கும், ஆட்டையாம்பட்டியில் ரூ.4 லட்சத்து 59 ஆயிரத்து 813-க்கும், அஸ்தம்பட்டியில் ரூ.7 லட்சத்து 25 ஆயிரத்து 60-க்கும், சூரமங்கலத்தில் ரூ.12 லட்சத்து 84 ஆயிரத்து 553-க்கும், இளம்பிள்ளையில் ரூ.3 லட்சத்து 61 ஆயிரத்து 840-க்கும், தம்மம்பட்டியில் ரூ.3 லட்சத்து 76 ஆயிரத்து 520-க்கும், அம்மாபேட்டையில் ரூ.5 லட்சத்து 56 ஆயிரத்து 748-க்கும், ஆத்தூரில் ரூ.15 லட்சத்து 39 ஆயிரத்து 366-க்கும், தாதகாப்பட்டியில் ரூ.11 லட்சத்து 82 ஆயிரத்து 273-க்கும் உள்பட மொத்தம் ரூ.77 லட்சத்து 13 ஆயிரத்து 495-க்கு காய்கறிகள் விற்பனை ஆகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தைப்பூசத்தை யொட்டி காய்கறிகள் விலை வழக்கத்தை விட சற்று அதிகமாக இருந்தது.
=========
=========