கரூரில் போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு

கரூரில் போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.;

Update: 2021-01-28 18:50 GMT
கரூரில் போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கிபோது எடுத்த படம்.
32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, கரூர் மாவட்ட காவல்துறை மற்றும் தமிழ்நாடு போலீஸ் டிராபிக் வார்டன் கரூர் பிரிவு சார்பில் கரூர் பஸ் நிலைய ரவுண்டானா அருகே போக்குவரத்து விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி நடந்தது. இக்கண்காட்சியை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கும், கார்களில் சீல் பெல்ட் அணிந்து வந்த ஓட்டுனர்களுக்கும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் பாராட்டி சாக்லெட் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி பாராட்டினார். 

மேலும் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு முகேஷ் ஜெயகுமார், கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன், கரூர் நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்