நெல் அறுவடை பணி மும்முரம்

சேத்தூர் அருகே நெல் அறுவடை பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2021-01-28 03:08 GMT
நெல் சாகுபடி
தளவாய்புரம்,


சேத்தூர் அருகே உள்ள தேவதானம் பகுதியில் 2,000 ஏக்கர் பரப்பளவில் பெரும்பாலான விவசாயிகள் ஆண்டுதோறும் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். 

இந்த ஆண்டு முன்கூட்டியே புரட்டாசி மாதம் பயிரிட்ட நெற்பயிர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையினால் நீரில் மூழ்கி சாய்ந்தன. 

அறுவடை 

இதனால் இந்த விவசாயிகளுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ஐப்பசி மாதம் நடவு செய்த விவசாயிகளுக்கு தற்போது தான் அறுவடை காலம் என்பதால் நெற்பயிரை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். 
ஆதலால் நெற்பயிரை அறுவடை செய்த பின் எஞ்சியிருக்கும் மாட்டுத் தீவனமாக பயன்படும் வைக்கோலை விவசாயிகள் வயலில் இருந்து  கேரளாவிற்கு லாரிகள் மூலம் அனுப்பி வருகின்றனர். 

நிவாரணம் 

இதன் மூலம் விவசாயிகளுக்கு  ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கிறது. 

இருப்பினும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்