திருச்சியில் பொது காப்பீடு ஊழியர்கள் உண்ணாவிரதம்
திருச்சியில் பொது காப்பீடு ஊழியர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி,
ஊதிய உயர்வு வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் 30 சதவீதம் உயர்த்த வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தையே மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஊதிய உயர்வு பேச்சு வார்த்தைக்கு உடனே நிர்வாகம் அழைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கிளை அலுவலகம் முன்பு பொது காப்பீடு ஊழியர் அகில இந்திய தொழிற்சங்கம் சார்பில் நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு துரைசாமி தலைமை தாங்கினார். கிளை செயலாளர் ஸ்ரீவத்சன் சிறப்புரையாற்றினார். ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க செயலாளர் சுரேஷ் வாழ்த்துரை வழங்கினார். இதில், பொது காப்பீடு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.