திருவாரூர் மாவட்டத்தில் குடியரசு தினவிழா
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடியரசு தினவிழா நடைபெற்றது.;
திருவாரூர்,
மன்னார்குடி ஊராட்சி ஒன்றியக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஒன்றியக்குழுதலைவர் டி.மனோகரன் தேசியக்கொடியேற்றினார். ஒன்றியகுழு துணை தலைவர் வனிதா அருள்ராஜன் முன்னிலை வகித்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.சிவக்குமார், பி.பக்கிரிசாமி, மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நகராட்சி ஆணையர் கமலா தேசியக்கொடியேற்றிவைத்தார். நிகழ்ச்சியில் மேலாளர் ரவி, நகரமைப்பு ஆய்வாளர் விஜயகுமார் நகராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
மன்னார்குடியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன் தலைமையில் தேரடி, காளவாய்க்கரை, செட்டித்தெரு ஆகிய இடங்களில் உள்ள காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
வலங்கைமான்
வலங்கைமான் பகுதியில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் சார்பில் குடியரசு தின விழா கொடியேற்றத்துடன் நடைபெற்றது. வலங்கைமான் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தாசில்தார் பரஞ்சோதி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் சங்கர் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் வாசுதேவன், ஒன்றிய ஆணையர்கள் கமலராஜன், சிவக்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சாந்தி தேவராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் கொடியேற்றினார்.
ஆலங்குடி ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் வக்கீல் மோகன் கொடியேற்றினார். ஒன்றியத்திற்குட்பட்ட 50 ஊராட்சி மன்ற அலுவலகங்களில் அந்தந்த பகுதி ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசியக்கொடியேற்றினர்.
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு நகராட்சி என்ஜினீயர் ராஜகோபால், மேலாளர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையர் லதா கொடியேற்றினார். இதைப்போல கூத்தாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வங்கி செயலாளர் வெங்கடேசன் முன்னிலையில் .தலைவர் பசீர்அஹமது கொடியேற்றினார். .லெட்சுமாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளர் சந்தானகிருஷ்ணன் முன்னிலையில் தலைவர் உதயகுமார் தேசியக்கொடியை ஏற்றினார். .கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ராயர் கொடியேற்றினார். .கூத்தாநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமைஆசிரியர் ராமலிங்கம் கொடியேற்றினார்.
குடவாசல்
குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசுதினவிழா நடைபெற்றது. விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், சுப்பிரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினர் மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஒன்றியக் குழுத் தலைவர் கிளாரா செந்தில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து கொடியேற்றினார். முடிவில் மேலாளர் அண்ணாதுரை நன்றி கூறினார்.
குடவாசல் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் பேரூராட்சி செயல் அலுவலர் யசோதா கொடியேற்றினார்.
தாசில்தார் அலுவலகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் தாசில்தார் ராஜன்பாபு கொடியேற்றினார். குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில் பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் சாமிநாதன் கொடியேற்றினார். குடவாசல் போலீஸ் நிலையத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு கொடியேற்றினார்.
குடவாசல் ஒன்றிய பா. ஜனதா கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு ஒன்றிய தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு சாரா அணி துணைச் செயலாளர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட பிற்பட்டோர் நல அணி தலைவர் வக்கீல் சிவசங்கரன் தலைவர்களின் படங்களுக்கு மாலை அணிவித்து கொடியேற்றினார். முடிவில் நகர தலைவர் முத்துக்குமார் நன்றி கூறினார்.