கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
பாளையங்கோட்டை கீழநந்தம் வடக்கூர் அருகே உள்ள இந்திரா காலனியை சேர்ந்தவர் கோபால். இவருடைய மகள் கண்ணம்மாள் (வயது 19). இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி. படித்து வந்தார். இவருக்கு தீராத வயிற்று வலி இருந்ததாம். இதற்கு பல இடங்களில் சிகிச்சை அளித்தும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த கண்ணம்மாள் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.