சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றம்
சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றம்
அண்ணாமலை நகர்,
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் சுதந்திரதினம் மற்றும் குடியரசு தினங்களில் கீழ கோபுர உச்சியில் தேசிய கொடி ஏற்றுவது வழக்கம். அதன்படி நாட்டின் 72-வது குடியரசு தினமான நேற்று தேசிய கொடி மூலவரான நடராஜர் முன்பு வைக்கப்பட்டு படைக்கப்பட்டது. பின்னர் மேளதாளம் முழங்க தீட்சிதர்கள் தேசியக் கொடியை கீழகோபுரத்திற்கு எடுத்துச் சென்றனர். தொடாந்து கோபுர உச்சியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. கோவில் கோபுரத்தில் தேசிய கொடி பட்டொளி வீசி பறந்தது. பின்னர் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு தீட்சிதர்கள் இனிப்பு வழங்கினார்கள்.