சாலையில் நடந்து சென்றபோது பரிதாபம்: மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு

கும்மிடிப்பூண்டி அருகே ரோட்டில் நடந்து சென்ற முதியவர் மோட்டார் சைக்கிள் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-01-26 02:01 GMT
கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த ஏனாதி மேல்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 85). முதியவரான இவர், கடந்த 21-ந் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று விட்டு தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதே திசையில் அவருக்கு பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சுப்பிரமணி, ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமானவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்